இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

37. அருணாருண கௌஸும்ப வஸ்திர பாஸ்வத் கடீதடி

அருணன்ங்கரவன் சூரிய பகவானொட சாரதி. இராமாயண இதிகாசத்தில வர ஜடாயுவும் சம்பாதியும் அருணனோட பிள்ளைகள். சூரியன் உதிக்கரத்துக்கு முன்னாடி சிவப்பா தெரியும் வண்ணத்த அருணோதயம்நு சொல்லுவா. இப்படிப்பட்ட அருணனின் வர்ணமான சிவப்பு ஆடைய இடுப்புல அணிஞ்சிண்டிருக்கா அம்பாள். ஞானம்கர சூரியன் உதிக்கறத்துக்கு முன்னாடி வைராக்கியம்கர அருணன் தெரியறான். அதுதான் பிரம்ம ஞானம்கர லலிதானுபவத்தோட ஆடைகள்னு சொன்னா பொருத்தமாத்தான் இருக்கு. இப்படிப்பட்ட நிலையிலதான் அம்பாள ஞானிகள் ரசிக்கரா.