இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா

மாணிக்யன்னா மாணிக்கம், முகுடன்னா மகுடம், ஜானுத்வயம்ன்னா இரண்டு முழங்கால்கள். விராஜிதான்னா எழிலுடன் விளங்குகிறாள்ன்னு சொல்றா வாக்தேவிகள். அதாவது மாணிக்க கிரீடம் போல அம்பாளோட முழங்கால்கள் இருக்குன்னு சொல்றா.  அம்பாள் மெல்லிய அங்கங்கள் உடையவளா இருக்கா. ஆனா முழங்கால்கள் மட்டும் சற்று கடினமா இருக்கும். நவ ரத்னங்கள்ள மாணிக்கமும் சற்று கடினமானது. அதனால முழங்கால்கள் இறுக்கமான மாணிக்க மகுடம் போல இருக்குங்கர உவம மகுடம் தரித்தால் போல அழகா இருக்கு.

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

அம்பாளோட அங்கங்கள வரிசையா வர்ணிக்கிறா வாக்தெவிகள். சிதக்னி குண்டத்திலேர்ந்து வந்த   அம்பாளோட சிரசு முன்னாடி தெரியரது. அப்புறம் அவளோட நெற்றி, முகம், தோள்கள், நாலு கைகள், ஸ்தனங்கள், வயிறு, இடுப்பு இப்படி வரிசையா பார்த்து வர்ணிச்ச வாக்தேவிகளால அவளோட தொடைகள மட்டும் பார்க்க முடியல, ஏன்னா அவை காமேசுவராரால மட்டுமே பார்க்க இயலும்ன்னு சொல்லி முடிச்சுட்டா வாக்தெவிகள். 

38. ரத்தின கின்கினிகா ரம்ய ரசனா தாம பூஷிதா

ரத்னம்னா எல்லாருக்கும் தெரியும். கிங்கினிகான்னா சத்தம் போடும் சலங்கைகள். தாமம்நா கயிறு. சத்தம் போடும் ரத்ன சலங்கைகள் கோர்க்கபட்ட அரை ஞாணை இடுப்பில தரிச்சின்டிருக்கா அம்பாள். இடுப்புக்கு கீழே தங்கம் அணிஞ்சுக்கர்து வழக்கமில்லை. ஒட்டியானம்ன்னு ஒரு ஆபரணம் இருக்கு. அதுக்கு கீழேதான் இந்த அரை ஞாண்.  நிர்விகல்பம்கர லலிதானுபூதி நிலை அடைஞ்ச ஞானிகள் நடந்து செல்லும்போது ஸப்த ஞான பூமிகள்ந்கர சலங்கையின் ஒலி கேட்கிறதுன்னு இந்த நாமாவின் உள் அர்த்தமா சொல்லலாம்