இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

28. மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேச மானஸா

மந்தஸ்மிதம்னா மகிழ்ச்சியால விளைந்த புன்னகைன்னு சொல்லலாம். புன்னகையால நம்மோட மனசுக்கு மட்டும் மகிழ்ச்சி ஏற்படல எதுக்க இருக்கறவாளுக்கும் மனசு நெறையரது.  இங்க அம்பாள் தன்னொட புன்னகையினால கணவரான காமேசரோட மனச மூழ்க வைக்கராளாம்.  அப்படிப்பட்ட அம்பாள ஸ்தோத்ரம் பண்றவா மனசும் ஆனந்த வெள்ளத்துல மூழ்கும். அதுவே பேரானந்தம்கர மோக்ஷம்னு சொல்வா ஞானமடைஞ்ச பெரியவா.

27. நிஜ ஸல்லாப-மாதுர்ய- விநிர்பர்சித-கச்சபி

சங்கீத வாத்யங்கள்ள சிறந்தது வீணைன்னு சொல்லுவா. அப்படி சங்கீத வித்வான்கள், தேவதைகள் இவா உபயோகிக்கிற வீணைகளுக்கு சில தனிப்பட்ட பேரும் இருக்கு. அத போல கல்விக்கு தேவதையான சரஸ்வதி உபயோகிக்கிற வீணைக்கு கச்சபின்னு பேரு. நாரதர் உபயோகிக்கிற வீணைக்கு மஹதின்னு பேரு. இது அவருக்கு ஹனுமார் கொடுத்தது. யார் யாருக்கு எந்த வீணைந்கர பட்டியல கூடுமானவர கொடுத்துருக்கேன். சிலது விட்டுப் போயிருக்கலாம். மாறிப் போயிருக்கலாம். தெரிஞ்சவா சொன்னா சரியா மாத்தி பதிவு பண்ரேன். 1. பிரம்மதேவனின் வீணை - அண்டம்.  2. விஷ்ணு - பிண்டகம். 3. ருத்திரர் - சராசுரம். 4.கௌரி - ருத்ரிகை.  5. காளி - காந்தாரி 6. லட்சுமி - சாரங்கி. 7. இந்திரன் - சித்திரம்  7. சரஸ்வதி - கச்சபி எனும் களாவதி. (இந்த நாமாவுல நாம பார்த்தது) 9. வியாழன்- வல்லகியாழ்  10. குபேரன் - அதிசித்திரம்  11. வருணன் - கின்னரி. 12. திலோத்தமை - நாராயணி. 13. வாயு - திக்குச்சிகையாழ். 14. அக்கினி - கோழாவளி. 15. நமன் - அஸ்த கூர்மம். 16. நிருருதி - வராளி யாழ். 17. ஆதிசேடன் - விபஞ்சகம்.  18. சந்திரன் - சரவீணை 19. சூரியன் - நாவீதம். 20. சுக்கிரன் - வாதினி 21. நாரதர் - மகதி யாழ் (

26. கற்பூர வீடிகா மோத ஸமாகர்ஷதிகந்தரா

கற்பூர வீடிகைங்கர தாம்பூலத்தால சிவந்த திருவாய் கொண்டவளாம் அம்பாள். கற்பூரம்னா பச்சைக் கற்பூரங்கர ஒரு வகை வாசனைத் திரவியம். கற்பூர வீடிகைன்னா வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, பச்சை கற்பூரம் எல்லாம் சேர்ந்த தாம்பூல வகை.  இதை தரிப்பதனால வாய் சிவந்து விடும். அன்னையின் தாம்பூல மகிமையால வாக்வன்மை பெற்றவா ஏராளம்.  திருஞான சம்பந்தர், காளிதாசன், மூக சங்கரர் போன்றவாள ப்ரத்யக்ஷ உதாரணமா சொல்லலாம். ஶ்ரீ வித்யா உபாசகாளா இருக்கரவா இந்த கற்பூர வீடிகைய தினமும் பூஜைல அம்பாளுக்கு உபசாரமா பண்ணுவா. அதனாலே அவாளுக்கு வாக் பலிதம் உண்டாரத கண்கூடா நாம பார்க்கலாம்.