இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

30. காமேச பத்த மாங்கல்ய சூத்ர சோபித கந்தரா

பத்தன்னா கட்டியது? காமேச பத்தன்னா காமேசர் கட்டியது. என்ன கட்டினார்? மாங்கல்ய சூத்ரம். யார் கழுத்தில்? காமேசியின் கழுத்தில். அப்படி சூடிய மாங்கல்ய சூத்ரம் கொண்ட அழகான கழுத்த உடையவள்னு சொல்ரா வாக்தேவிகள்.  பெண்கள் எவ்வளவோ நக அணிஞ்சாலும் மாங்கல்ய சூத்ரம்தான் ரொம்ப அழகானதும் சிறப்பானதும் கூட. இந்த சூத்ரம்தான் கணவனோட ஆயுளுக்கு சூத்ரம்னு சொல்லுவா.  அமுதம் பெற தேவாளும் அசுராளும் பார்கடல கடயரா. அப்போ முதல்ல ஆலகால விஷம் வறது. அத பரமேஸ்வரன் அருந்தி அனைவரையும் காக்கரார். ஆனா அந்த பரமேஸ்வரனையும் விஷத்தால பாதிக்கப்படாம அவர் கழுத்திலேயே நிக்கப் பண்ணினது அம்பாள். அதாவது அவள் கழுத்துல இருக்கற திருமாங்கல்ய சூத்ரம்தான். அதனால அதுதான் அவளுக்கு அழக சேர்க்கர்துன்னு சொல்றது ரொம்ப பொருத்தம்னு தோன்றது.

29. அனாகளித சாத்ருஸ்ய சிபுகஶ்ரீ விராஜிதா

சிபுகம்னா முகவாய்க் கட்டை. அம்பாளின் முகவாய்க்கட்டைக்கு உவமை தேடிப்பார்த்து சலித்த வாக்தேவிகள் அது கிடைக்காம உவம இல்லா முகவாய் உடையவவள்னு சொல்றா.  இந்த நாமால என்ன ஒரு சுவாரஸ்யம்நு பாப்போம்.  காமேஸ்வரர் காமேஸ்வரியொட முகத்துக்கிட்ட இதழ் அமுதத்த பருக நெருங்கி வராராம். அந்த இதழ்கள் வாசனை உள்ள சிவப்புப் பூவப் போல இருக்காம். அவள் முகம் கண்ணாடி போல இருக்கு. நெருங்கி வந்த காமேஸ்வரர் பூப்போல இருக்கும் அந்த இதழ் அமுதத்த பருக முகவாய் கட்டையை பிடித்து முகத்த மேலே தூக்கராராம். .அதனால முகம்ங்கர கண்ணாடியைத் தாங்கிப் பிடிக்கும் பிடி போல அந்த முகவாய்க் கட்டை இருக்காம். இப்படி ஒரு நிகழ்ச்சிய நம்ம கண் முன்னாடி நிறுத்தரா நம்ம ஆசார்யாள் சௌந்தர்ய லஹரில.