29. அனாகளித சாத்ருஸ்ய சிபுகஶ்ரீ விராஜிதா


சிபுகம்னா முகவாய்க் கட்டை. அம்பாளின் முகவாய்க்கட்டைக்கு உவமை தேடிப்பார்த்து சலித்த வாக்தேவிகள் அது கிடைக்காம உவம இல்லா முகவாய் உடையவவள்னு சொல்றா. 

இந்த நாமால என்ன ஒரு சுவாரஸ்யம்நு பாப்போம். 

காமேஸ்வரர் காமேஸ்வரியொட முகத்துக்கிட்ட இதழ் அமுதத்த பருக நெருங்கி வராராம். அந்த இதழ்கள் வாசனை உள்ள சிவப்புப் பூவப் போல இருக்காம். அவள் முகம் கண்ணாடி போல இருக்கு. நெருங்கி வந்த காமேஸ்வரர் பூப்போல இருக்கும் அந்த இதழ் அமுதத்த பருக முகவாய் கட்டையை பிடித்து முகத்த மேலே தூக்கராராம். .அதனால முகம்ங்கர கண்ணாடியைத் தாங்கிப் பிடிக்கும் பிடி போல அந்த முகவாய்க் கட்டை இருக்காம். இப்படி ஒரு நிகழ்ச்சிய நம்ம கண் முன்னாடி நிறுத்தரா நம்ம ஆசார்யாள் சௌந்தர்ய லஹரில.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா