இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

36. ஸ்தன பார தலன் மத்ய பட்ட பந்த வலித்ரயா

அம்பாளோட மத்ய பாகமான இடுப்புல மூணு கோடு போல மடிப்பு இருக்காம். அது அவளோட ஸ்தன பாரத்த தாங்கரதாம்.  அம்பாளோட மத்ய பாகம்னா அது ஶ்ரீ வித்தயான பதினைந்து அக்ஷரத்தின் நடு பாகமான மத்ய (காமராஜ) கூடத்த குறிக்கரது. இதுதான் முதலாவதாக உள்ள பாரமான வாக்பவ கூடத்தையும் , மூன்றாவதான மெல்லிய சக்தி கூடத்தையும் இணைக்கர பாலமா மடிப்பா இடையீடா இருக்கறது. இதத்தான் வாக்தேவிகள் இந்த நாமாவுல வர்ணனையா சொல்றா.  (குறிப்பு:  இந்த பதினைந்து அக்ஷரங்கள் கீழே உள்ள ஸ்லோகத்துல பூடகமாக சொல்றது சாத்ரங்கள்.  காமோயோனி; கமலா வஜ்ரபானிர் குஹஹஸ மாதரிஷ்வ அப்ரம் இந்த்ர புனர் குஹ ஸகலா மாயாய ச புருசேச விஸ்வமாதாதி வித்யா இந்த ஸ்லோகத்தில உள்ள பதினைந்து பீஜங்களும் இப்படி உள்ளது; காமோ (க) யோனி (ஏ) கமலா (ஈ) வஜ்ரபானிர் (ல) குஹ (ஹ்ரீம்)ஹ (ஹ) ஸ (ஸ) மாதரிஷ்வ (க) அப்ரம் (ஹ) இந்த்ரா (ல)/புனர் (மீண்டும) குஹ (ஹ்ரீம்)ஸகலா (ஸ க, ல) மாயாய (ஹ்ரீம்) ச புருசேச விஸ்வமாதாதி வித்யா.)

35. லக்ஷய ரோம லதாதாரதா ஸமுன்னேய மத்யமா

லக்ஷய = கண்ணுக்கு புலப்படும் ரோம = முடி லதா = கொடி தாரத = புறப்படுதல் சமுன்னெய = முடிவுக்கு வருதல் மத்யமா = இடுப்புப் பகுதி  அம்பாளோட வயிற்றில மெல்லிய ரோமங்கள் தெரியறதாம். கொடி போன்ற அது தெரியரதால அதன் முடிவுல இடுப்புன்னு ஒண்ணு இருக்கறதா அதக் கொண்டு ஊகிக்க முடிகிறதுன்னு அவளோட இடுப்பு மிகவும் மெல்லியதுன்னு சொல்ல வந்த வாக் தேவதைகள் இப்படி வர்ணிக்கறா, பிரம்மம்ன்னு ஒண்ணு கண்ணுக்கு புலப்படாத இருக்கறத தத்வமசிங்கர ரோம லதைய கொண்டு அறிகிற மாதிரி.