36. ஸ்தன பார தலன் மத்ய பட்ட பந்த வலித்ரயா

அம்பாளோட மத்ய பாகமான இடுப்புல மூணு கோடு போல மடிப்பு இருக்காம். அது அவளோட ஸ்தன பாரத்த தாங்கரதாம். 

அம்பாளோட மத்ய பாகம்னா அது ஶ்ரீ வித்தயான பதினைந்து அக்ஷரத்தின் நடு பாகமான மத்ய (காமராஜ) கூடத்த குறிக்கரது. இதுதான் முதலாவதாக உள்ள பாரமான வாக்பவ கூடத்தையும் , மூன்றாவதான மெல்லிய சக்தி கூடத்தையும் இணைக்கர பாலமா மடிப்பா இடையீடா இருக்கறது. இதத்தான் வாக்தேவிகள் இந்த நாமாவுல வர்ணனையா சொல்றா. 

(குறிப்பு: 

இந்த பதினைந்து அக்ஷரங்கள் கீழே உள்ள ஸ்லோகத்துல பூடகமாக சொல்றது சாத்ரங்கள். 

காமோயோனி; கமலா வஜ்ரபானிர் குஹஹஸ மாதரிஷ்வ அப்ரம் இந்த்ர புனர் குஹ ஸகலா மாயாய ச புருசேச விஸ்வமாதாதி வித்யா

இந்த ஸ்லோகத்தில உள்ள பதினைந்து பீஜங்களும் இப்படி உள்ளது;

காமோ (க) யோனி (ஏ) கமலா (ஈ) வஜ்ரபானிர் (ல) குஹ (ஹ்ரீம்)ஹ (ஹ) ஸ (ஸ) மாதரிஷ்வ (க) அப்ரம் (ஹ) இந்த்ரா (ல)/புனர் (மீண்டும) குஹ (ஹ்ரீம்)ஸகலா (ஸ க, ல) மாயாய (ஹ்ரீம்) ச புருசேச விஸ்வமாதாதி வித்யா.)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா