9. குரோதாங்கார அங்குசோஜ்வலா

 


குரோதம்னா கோபத்துக்கு பேரு. அங்குசம்னா தொரட்டின்னு சொல்லுவா. யானையின் கோபத்தை அடக்க பாகன் வைத்திருக்கும் ஆயுதம்தான் தொரட்டி. அதாவது ஒரு இரும்புக் குச்சியின் உச்சியில் நன்னா வளைஞ்சு இருக்கும் ஒருவிதமான ஆயுதம். பயங்கர மதம் பிடித்த யானையைக் கூட இந்த ஆயுதத்தால் அடக்க முடியும். 

நமக்குப் பிடிக்காத விஷயம் யாராவது செஞ்சா உடனே நாம "எனக்கு அடக்க முடியாத கோபம் வரும் தெரியுமா?" அப்படின்னு சொல்ரோமில்லையா. அந்த கோபம் நம்மை அழிவுப்பாதயில அழைச்சுண்டு போகும். அதனால தான் பெரியவா எல்லாரும் காமத்தை விடு கோபத்தை விடுன்னு சொல்றா. 

யார் மேலயாவது அவா செயலுக்கு விரோதமா கோபப்பட்டா அவாளுக்கு ஒரு பயம் மாதிரி ஒரு உணர்ச்சி ஏற்பட்டு அந்த செயல இனிமே செய்ய முடியாமல் போகும். அப்படிப்பட்ட அடக்க முடியாத கோபம் கூட அம்பாள் கையில ஆயுதமா இருக்கு. தர்மத்துக்கு விரோதமா எண்ணம் செயல் ஏற்படும்போது அம்பாளுக்கு கோபம் வரது. அது அதர்ம கார்யங்கள இனிமே செய்ய விடாம காக்கரது.

இதனால்தான் வாக்தேவதைகள் அம்பாள் குரோதம்கர அங்குசத்த வச்சுண்டு இருக்கரா அப்படின்னு துதிக்கரா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா