இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

34. நாப்யால வால ரோமாலி லதா பல குசத்வயி

நாபின்னா வயிறு, தொப்புள். ரோமம்ன்னா ரோமங்கள். லதான்னா கொடி. குசத்வயின்னா இரு ஸ்தனங்கள். தொப்புள்ங்கர வேரில் இருந்து மேலே வந்த ரோமங்களான கொடில பூத்த கனிகள போல இருக்காம் அம்பாளோட ஸ்தனங்கள். காம நோக்கில் இதன் வர்ணனையைப் பாக்காம கவியின் நோக்கில் பார்க்கும்போது இதுல அம்பாளோட அழகு புலப்படறது.  ஆழமான அர்த்தத்தை பார்த்தோம்னா ஆன்ம சாக்ஷாத்காரம்கற வேரிலிருந்து வந்த நிதித்யாசன கொடிகள்ள விளன்ச ஸவிகல்பம், நிர்விகல்பம் என்கிற இரண்டு சமாதிக் கனிகள்தான் லலிதானுபவத்தின் இரண்டு ஸ்தனங்கள் என்கிற சூக்ஷ்மமான விஷயம் புரியும். புரிந்து சிறக்க புவனத்தாயை புந்தியில் வைத்துப் போற்றுவோம்.

33. காமேச பிரேமரத்ன மணி ப்ரதிபனஸ்தனி

பிரஹத் குசாம்பிக்கை ன்னு திருவிடை மருதூர் அம்பாளுக்கு ஒரு பேர் இருக்கு. இந்த நாமாவுல வாக்தேவிகள் ரத்ன கலசம் போன்ற ஸ்தானங்கள் உள்ளவல்னு சொல்றா. அபிராமி அந்தாதியிலும் அபிராமி பட்டர் அம்பாள பென்னம் பெரிய முலையும் அதில் முத்து மாலையும் என்று சொல்றார். பரமேஸ்வராரான காமெசர் காமத்துக்கு அதிபதியான மன்மதனையே தன்னோட கண்களால எரிச்சவர்ந்நு நமக்குத் தெரியும். அப்படிப்பட்ட காமேசரையே தன்னிடம் பிரேமை, ஆசை கொள்ள வைத்தவள்ன்னு சொல்ல வந்த வாக்தேவிகள், அதற்கு காரணமா அன்னை தன் குசங்களால் காமேசரின் பிரேமையை/அன்பை பெற்றவள்னு சொல்றா.  காமத்த ஜெயிச்ச மஹாங்களாளத்தான் இந்த நாமாவின் உள் அர்த்தத்த உள்ளபடி புரிய வைக்க முடியும். என்னைப்போல உலகியலில் பந்தம் உள்ளவன் மேலோட்டமான பொருளத்தான் சொல்ல முடியும்.

32. ரத்தின கிரைவேய சிந்தாக லோல முக்தா பலான்விதா

ரத்தினங்களால உருவானதும் வைர வைடூரியங்கள் பதித்ததுமான மாலையை அதாவது அட்டிக்கைன்னு சொல்லுவா, அத அம்பாள் கழுத்தில அணிஞ்சுன்டு இருக்காளாம். கிரீவம்ன்னா கழுத்து. கிரைவேயகம்ன்னா கழுத்தில் அணியும் ஆபரணம்.  சிதக்னி குண்டத்திலிருந்து வந்த அம்பாள இரண்டு விதமான ரத்தின ஜாதிகளால் ஆன மாலைய அணிஞ்சு வாக்தெவிகள் பாக்கரா. அது என்ன இரண்டு ஜாதிகள்னா  ஒண்ணு அம்பாளோட உருவத்த முழுதும் பாக்க முடிஞ்சவாளான முக்தர்கள்.  மற்றவா இந்த சம்சார பந்தத்துல லோல் பட்டிண்டிருக்கிற லோலர்கள்.  இந்த முக்தர்களும், லோலர்களும் தான் அம்பாளோட அட்டிகையில இருக்கற முத்துக்கள், ரத்னங்கள் அப்படீன்னு உருவகப்படுத்தரா வாக்தேவிகள். எந்த விதமான கருணையைப் பொழிந்து முமூக்ஷுக்கல குரு ஸ்வரூபமா இருந்து முக்தர்களா ஆக்கராளோ அவளேதான் ஞானிகள முதற்கொண்டு மோகத்தில பலமா ஆக்ருஷம் பண்ணி மஹா மாயயா விளையாடறா. எனவே இந்த ரெண்டு பேருமே அவளின் அணிகலன்தான்னு சொல்றது பொருத்தமாத்தான் இருக்கு