32. ரத்தின கிரைவேய சிந்தாக லோல முக்தா பலான்விதா

ரத்தினங்களால உருவானதும் வைர வைடூரியங்கள் பதித்ததுமான மாலையை அதாவது அட்டிக்கைன்னு சொல்லுவா, அத அம்பாள் கழுத்தில அணிஞ்சுன்டு இருக்காளாம்.

கிரீவம்ன்னா கழுத்து. கிரைவேயகம்ன்னா கழுத்தில் அணியும் ஆபரணம். 

சிதக்னி குண்டத்திலிருந்து வந்த அம்பாள இரண்டு விதமான ரத்தின ஜாதிகளால் ஆன மாலைய அணிஞ்சு வாக்தெவிகள் பாக்கரா. அது என்ன இரண்டு ஜாதிகள்னா 

ஒண்ணு அம்பாளோட உருவத்த முழுதும் பாக்க முடிஞ்சவாளான முக்தர்கள். 

மற்றவா இந்த சம்சார பந்தத்துல லோல் பட்டிண்டிருக்கிற லோலர்கள். 

இந்த முக்தர்களும், லோலர்களும் தான் அம்பாளோட அட்டிகையில இருக்கற முத்துக்கள், ரத்னங்கள் அப்படீன்னு உருவகப்படுத்தரா வாக்தேவிகள்.

எந்த விதமான கருணையைப் பொழிந்து முமூக்ஷுக்கல குரு ஸ்வரூபமா இருந்து முக்தர்களா ஆக்கராளோ அவளேதான் ஞானிகள முதற்கொண்டு மோகத்தில பலமா ஆக்ருஷம் பண்ணி மஹா மாயயா விளையாடறா. எனவே இந்த ரெண்டு பேருமே அவளின் அணிகலன்தான்னு சொல்றது பொருத்தமாத்தான் இருக்கு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா