இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

25. சுத்த வித்யாங்குராகார த்விஜ பங்க்தி த்வயோஜ்வலா

சுத்தவித்யாவின் தளிர் வடிவில ரெண்டு வரிசைப் பற்களால ஜொலிக்கிறா அம்பாள். சுத்தவித்யான்னா ஸ்ரீவித்யா.  சுத்தா என்ற வார்த்தையொட பொருள் தூய்மை (அதாவது அறியாமைக்கு எதிரான) என்பது. வித்யான்னா சோடசீ வித்யா. அவளுடைய பற்கள் சோடசாக்ஷரீ மந்திரத்தை ஒத்திருக்காம். இந்த மந்திரம் தேவியோட மூலாதாரத்திலிருந்து தோன்றி, பரா, பச்யந்தி முதலான பல்வேறு நெலைகள கடந்து அவள் வாயிலிருந்து வைகரி வடிவில வெளிப்பட்டு, நம்மோட காதுகள எட்டரது. இந்த நிலைகள்ள, பரா என்பது விதையொட வளர்ச்சின்னு சொல்லலாம். பஸ்யந்தி என்பது முளைக்கத் தொடங்கிய விதை, மத்யமா என்பது இரண்டு சிறிய இலைகள் தெரிவதுன்னு வச்சுக்கலாம். கடைசி நிலை வைகரி, இந்த ரெண்டு இலைகளும் பிரிக்கப்பட்டாலும், அதே நேரத்தில் வேரில் இணைந்தாலும், இங்கே அவை பற்களை ஒத்த அங்கூரங்களா இருக்கு. மொத்த பற்களின் எண்ணிக்க 32. இதேபோல் சோடசக்ஷரி (16) மந்திரத்தின் இரண்டு மடிப்பாக மொட்டுகள் ஒவ்வொன்ன்னும் சேர்ந்து 32 ஆ ஆறது. இந்த நாமாவுல உள்ள த்விஜா என்பதன் அர்த்தத்த பார்த்தோம்னா வேதம் சொல்றது போல வித்யா ஹ வை பிராமணம் அஜகம ன்னு. அதாவது வித்யா, திவிஜர்களாள கற்பிக்கப்பட்டு பரப்பப்பட்டது. எனவே

24. நவ வித்ரும பிம்பஶ்ரீ நியக்காரி ரதனஸ்சதா

பவழமும் கோவைப் பழமும் இயற்கையா சிவப்பா இருக்கும். அவை வெளிலேர்ந்து உண்டாக்கின சிவப்பு இல்ல. அதுபோல அம்பாளின் உதட்டுக்கு எதுவும் சிவப்பு நிறப் பூச்சு போடற மாதிரி இல்லாம இயற்கையாவே சிவப்பு நிறமா இருக்கு. அதப்பார்த்த பவழமும் கோவைப் பழமும் தாங்கள்தான் இயற்கையா சிவப்புங்கற கர்வத்த விட்டு தல குனிஞ்சு நிக்கறதாம். இதத்தான் வாக்தேவிகள் அழகா வர்ணிக்கறா.  உள் அர்த்தமா சொல்லனும்னா கோவைப் பழமும் பவள சிவப்பு நெறங்கள் சாமானிய ஞானத்த குறிக்கரது. லலிதானுபவம் மிகுந்த ஆத்ம ஞானியின் இயற்கை ஞானமாகிற விசேஷ சிவப்பப் பார்த்து சாமானிய ஞானங்கள் தலை குனியறதோன்னு நினைக்க தோன்றது. 

23. பத்மராக சிலாதர்ச பரிபாவி கபோலபூ:

காதணிய பத்தி சொன்ன வாக்தேவிகள் அடுத்ததா அம்பாளோட கன்னங்கள பத்தி வர்ணிக்கரா.  பத்ம ராகம் என்பது பிரகாசிக்கற சிவப்பான ஒரு வைரக்கல். கபோலம் என்றால் கன்னம். அம்பாளோட கன்னங்கள் அந்த பத்மராகக் கற்களைப் போல பிரகாசிக்கிறதாம். இந்த காலத்துல பிரமாதமா முக அலங்காரம் செய்துக்கர ஸ்திரீகள் கன்னத்துல சிவப்பா உள்ள ஒரு குழம்பயும் மினுமினுப்பா உள்ள சிறுசிறு சிவப்புக் கற்களையும் தடவிக்கரத பார்த்திருக்கலாம். அப்படிப்பட்ட ஸ்தீரிகள பார்க்கும்போது ஶ்ரீவித்தைய உபாசிக்கரவாளுக்கு அம்பாளோட ஞாபகம் வரணும்னு சாத்ரங்கள் சொல்றது. அப்படி யார் யாருக்கு ஞாபகம் வரதோ அவாள ஶ்ரீவித்யா உபாசகாள்னும் சொல்லலாம்.