25. சுத்த வித்யாங்குராகார த்விஜ பங்க்தி த்வயோஜ்வலா

சுத்தவித்யாவின் தளிர் வடிவில ரெண்டு வரிசைப் பற்களால ஜொலிக்கிறா அம்பாள்.

சுத்தவித்யான்னா ஸ்ரீவித்யா. 

சுத்தா என்ற வார்த்தையொட பொருள் தூய்மை (அதாவது அறியாமைக்கு எதிரான) என்பது. வித்யான்னா சோடசீ வித்யா. அவளுடைய பற்கள் சோடசாக்ஷரீ மந்திரத்தை ஒத்திருக்காம்.

இந்த மந்திரம் தேவியோட மூலாதாரத்திலிருந்து தோன்றி, பரா, பச்யந்தி முதலான பல்வேறு நெலைகள கடந்து அவள் வாயிலிருந்து வைகரி வடிவில வெளிப்பட்டு, நம்மோட காதுகள எட்டரது. இந்த நிலைகள்ள, பரா என்பது விதையொட வளர்ச்சின்னு சொல்லலாம். பஸ்யந்தி என்பது முளைக்கத் தொடங்கிய விதை, மத்யமா என்பது இரண்டு சிறிய இலைகள் தெரிவதுன்னு வச்சுக்கலாம். கடைசி நிலை வைகரி, இந்த ரெண்டு இலைகளும் பிரிக்கப்பட்டாலும், அதே நேரத்தில் வேரில் இணைந்தாலும், இங்கே அவை பற்களை ஒத்த அங்கூரங்களா இருக்கு. மொத்த பற்களின் எண்ணிக்க 32. இதேபோல் சோடசக்ஷரி (16) மந்திரத்தின் இரண்டு மடிப்பாக மொட்டுகள் ஒவ்வொன்ன்னும் சேர்ந்து 32 ஆ ஆறது.

இந்த நாமாவுல உள்ள த்விஜா என்பதன் அர்த்தத்த பார்த்தோம்னா வேதம் சொல்றது போல வித்யா ஹ வை பிராமணம் அஜகம ன்னு. அதாவது வித்யா, திவிஜர்களாள கற்பிக்கப்பட்டு பரப்பப்பட்டது. எனவே த்விஜர்கள் வித்யாவின் மொட்டுகள மாதிரி இருக்கா.

மேலும், தேவியின் வாயிலிருந்து திவிஜர்கள் வெளிவருவதால் அவா அவளுடைய பற்கள் மாதிரி இருக்கா.

த்விஜபங்க்தின்னா 32 வகையான தீட்சைகளயும் குறிக்கரது. திவிஜர்கள் அதாவது பிராம்மனாளின் உபநயனம் இரண்டாம் பிறப்புன்னு வச்சுண்டா ஶ்ரீவித்யா தீட்சை மூன்றாம் (கடைசி) பிறவின்னு சொல்லலாமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா