இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

14. குருவிந்த மணி ஶ்ரேனி கணத் கோடீர மண்டிதா

மகுடம்னா ராஜாக்கள் அணியும் கிரீடம். இதில் அவர்கள் தலமுடி தெரியாத வகைக்கு இருக்கும்.  கோடீரம்னா மகாராணிக்கள் அணியும் கிரீடம். இதுல அவர்கள் கூந்தல் முடிகள் அழகா தெரியும்படி அமைஞ்சிருக்கும். குருவிந்த மணிந்கரது பத்மராகம் என்கர ஒரு கல். இது சிவப்பான நிறத்துல இருக்கும். அம்பாளோட தலையில உள்ள கிரீடத்துல இந்த கற்கள் வரிசையா இருக்கு. கிரீடம்கரது உயர்வான ஞான நிலைய குறிக்கறது.  சிவப்பான கற்கள் ஞான நிலையின் அனுபவங்கள்னு சொல்லலாம்.  இதத்தான் அம்பாள் தன்னோட சிரசுல வைச்சுண்டு இருக்கா. இப்படி தியானம் செஞ்சா நமக்கு அம்பாளோட அனுகிரஹம்கர ஞான அனுபவம் கெடைக்கும்.

13. சம்பகாசோக புன்னாக சௌகந்தித லசத் கசா

சம்பகம், அசோகம், புன்னாகம் என்பதெல்லாம் மணம் வீசற பூக்களின் பேர்கள். இதெல்லாம் கூந்தலில் சூடப்படுபவது. இந்த பூக்களின் நறுமணத்தால் அம்பாளின் கூந்தல் மணம் வீசரதுங்கரா வாக்தெவிகள்.  ஞானத்த அடயரத்துக்கு முன்னாடி நமது உடலும் உள்ளமும் எப்படி இருந்துதோ ஞானம் அடஞ்ச பிறகும் அப்படியேதான் இருக்கு. ஆனா அதுல இருந்த அழுக்கு போயி மணம் வீசரது அவ்வளவுதான். ஐம்புலங்களும் அம்பாள் கையில பூக்கள்னு பார்த்தோம். அதே மாதிரி நமது விருத்திகள் அதாவது எண்ணமும் செயலும் அம்பாள் சிரசுல மலர்களா இருக்கு. ஆன்ம ஞானம் அடன்ச பிற்பாடு இந்த ஒலகம் வெறுமையா போகாது, மணம் வீசும். ஏன்னா ஆன்ம ஞானம்கர கூந்தலுக்கு எல்லாம் ஒன்றுங்கர சின்மயப் பூக்கள் மணத்த சேக்கரது.

12. நிஜாருணப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்டமண்டலா

 அம்பாளின் நிறம் சிவப்பு. சரியா சொல்லனும்னா அம்பாள் மேனி முழுதும் செம்பஞ்சுக்குழம்பு நிறத்துல இருக்காம். அந்த உடம்பிலிருந்து வெளிப்படும் காந்தி அதாவது ஒளி அனைத்து பிரம்மாண்டங்களயும் மூழ்கடிக்கிரது.  அண்டத்துல உள்ளதுதான் பிண்டத்துலன்னு சொல்லுவா. பிண்டம்னா இந்த ஒடம்பு. அப்ப அம்பாளின் சிவப்பு நிறம் நமது உடம்பையும் மூழ்கடிக்கிரதுன்னு அர்த்தம் ஆரது. நம்ம ஒடம்புக்குள்ள இரத்தம் சேப்பு நிறத்துல மூழ்கி இருக்கு இல்லையா.  இந்த நாமத்த சொல்லி சிவப்பான அம்பாள தியானம் பண்ணினா நமது ஒடம்பும் சிவப்பா ஆகி கடைசில அந்த தேஜசுல கலந்துடும். அதுதான் ஜீவன் முக்தின்கறது.

11. பஞ்ச தன்மாத்ர ஸாயகா

  பஞ்சன்னா அஞ்சு. தன்மாத்திரம்னா புலன்கள். ஸாயகான்னா அம்புகளாக கொண்டவள்.  மனம் வில்லுன்னா அதன் வழியே செல்லும் அம்புகள் நம்மோட ஐந்து புலன்களாகத்தான் இருக்க வேண்டும் இல்லையா? வில்லு மெல்லிய கரும்பாக இருந்தால் அதனால் எய்யப்படும் அம்புகள் மென்மையான ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். அதனால் அவை மலர் அம்புகள்ங்கரா வாக்தேவிகள்.  என்னதான் வலிமையான வில்லா இருந்தாலும் அதனால இலக்கை அடைய முடியாது. அதற்கு அம்புகள் வேண்டும். அதன் வழியேதான் அதன் செல்லுகை. மனம் எத்தகைய வலிமை என்பது அது ஐம்புலன்களின் செயல்பாட்டில்தான் உள்ளது. வெகு தூரத்தில் இருந்து வரும் சப்தத்தை, காதுகளால் என்ன சப்தம் என்பதை அறிய முடியாது. மனம் காதுகள் வழியாகச் சென்று அது என்ன சப்தம் என்பதை அறிந்து கொள்கிறது. காதிற்கு அந்த சப்தம் நல்லதா கெட்டதா என்பது தெரியாது. மனம்தான் அவரவர்களின் பக்குவத்தைப் பொறுத்து அதனை விளங்கிக் கொள்கிறது. இப்படியே ஒவ்வொரு புலன்களுக்கும் பொருத்திப் பார்க்கணும்.  நாம கேட்கற சப்தம் தொலை தூரத்திலிருந்து வரது. அது நமது காதின் வழியே மனசுல போன உடனே அவ்வளவு பெரிய தூரத்தை கடந்து வந்து  அந்த மனத்தினால் சில வினாடிகளில் அந்த த

10. மனோரூபேக்ஷு கோதண்டா

 மனசுங்கறது நாம கண்ணால பார்க்க முடியாத ஆனா நமது ஐம்புலங்களால் தனது இருப்பை உணர்த்தும் ஓர் அந்தக்கரணம் (உள் உறுப்பு). அந்த மனச உடையவன் மனிதன்.  அம்பாள் கையில ஒரு வில் இருக்கறது. அது கரும்பினால் ஆன வில். மன்மதன் என்று ஒருவன் நமது காமத்திற்கு அதிபதியாக இருக்கிறான். அவனும் தான் கையில் கரும்பு வில் வைத்திருக்கிறான்.  காமம் நமது மனதில்தான் உதிக்கிறது. அது மூலமாத்தான் உலக வியாபாரங்கள் நடக்கறது. கரும்பில் கடினமான கணுக்கள் இருப்பது நமக்குத் தெரியும். ஆனால் அதன் ரசம் தித்திக்கும். அது போல நமது மனம் கடினமாக இருந்தாலும் உள்ளே இந்திரிய வியாபாரங்களினால் வாழ்வில் சுவை ஏற்படுகிறது. இந்த மனத்த நாம கட்டுப்படுத்துவது ரொம்ப கஷ்டம். அதனால இத நாம அம்பாள் கய்யில கொடுத்துடனும். அப்ப அது சுலபமா கட்டுக்குள் வந்து மன்மதங்க்ற காமத்துக்கிட்டேர்ந்து விலகி அலை பாயும் நமது மனசு நம்ம இஷ்டத்துக்கு நடக்காம அம்பாள் இஷ்டப்படி நடக்கும். கடைசில மனசுன்னு ஒண்ணு இல்லாமலே போயி நம்மள மோக்ஷ சாம்ராஜ்யதுக்கும் அழைச்சுண்டு போகும். இதையே அம்பாள் தன் கையில வில்லாக வச்சுண்டு இருக்கான்னு வாக்தேவிகள் சொல்றா.  வில்லுன்னு ஒண்ணு இருந்தா அம்

9. குரோதாங்கார அங்குசோஜ்வலா

  குரோதம்னா கோபத்துக்கு பேரு. அங்குசம்னா தொரட்டின்னு சொல்லுவா. யானையின் கோபத்தை அடக்க பாகன் வைத்திருக்கும் ஆயுதம்தான் தொரட்டி. அதாவது ஒரு இரும்புக் குச்சியின் உச்சியில் நன்னா வளைஞ்சு இருக்கும் ஒருவிதமான ஆயுதம். பயங்கர மதம் பிடித்த யானையைக் கூட இந்த ஆயுதத்தால் அடக்க முடியும்.  நமக்குப் பிடிக்காத விஷயம் யாராவது செஞ்சா உடனே நாம "எனக்கு அடக்க முடியாத கோபம் வரும் தெரியுமா?" அப்படின்னு சொல்ரோமில்லையா. அந்த கோபம் நம்மை அழிவுப்பாதயில அழைச்சுண்டு போகும். அதனால தான் பெரியவா எல்லாரும் காமத்தை விடு கோபத்தை விடுன்னு சொல்றா.  யார் மேலயாவது அவா செயலுக்கு விரோதமா கோபப்பட்டா அவாளுக்கு ஒரு பயம் மாதிரி ஒரு உணர்ச்சி ஏற்பட்டு அந்த செயல இனிமே செய்ய முடியாமல் போகும். அப்படிப்பட்ட அடக்க முடியாத கோபம் கூட அம்பாள் கையில ஆயுதமா இருக்கு. தர்மத்துக்கு விரோதமா எண்ணம் செயல் ஏற்படும்போது அம்பாளுக்கு கோபம் வரது. அது அதர்ம கார்யங்கள இனிமே செய்ய விடாம காக்கரது. இதனால்தான் வாக்தேவதைகள் அம்பாள் குரோதம்கர அங்குசத்த வச்சுண்டு இருக்கரா அப்படின்னு துதிக்கரா.

8. ராகஸ்வரூப பாசாட்யா

 ராகம் என்ற வடிவுடைய பாசத்தை கையில் கொண்டவள். இராகன்னா ஆசை. பாசம்னா கயிறு. நமக்கு உள்ளது வெறும் ஆசை. அதுவே அம்பாளுக்கு ஆசைனா அது இச்சா சக்தி. இடது பின் கையில் அம்பாள் இச்சா சக்தி என்ற பாசக்கையிரை வைச்சுண்டு இருக்கான்னு வாக்தேவிகள் சொல்றா.  நமது விருப்பப்படி ஆசையை நாம் வளைக்க முடியாது. ஆனால் அம்பாள் விரும்பினா அது கயிறு மாதிரி தனது ஆசையை வளைத்து இயங்க வைக்க முடியும்.  நமது ஆசைகளையும் அம்பாள் கையில் கொடுத்து விட்டால் போதும், அது நிறைவேறக் கூடியதா இருந்தா அம்பாள் நிறைவேற்றி வைப்பா. அப்படி நிறைவேறலைன்னா அதுவும் அம்பாள் இஷ்டம்னு இருக்கணும். அப்படி இருந்தா நாமும் எந்த கவலையும் இல்லாம  நிம்மதியா இருக்கலாம். நிம்மதியா எந்த கவலையும் இல்லாம ஸ்வரூப தியானத்தில் இருப்பதுதான் மோக்ஷம், ஞானம் என்பதெல்லாம். இதை அருள்பவள்தான் ராகஸ்வரூப பாசாட்யாவான அம்பாள்.

7. சதுர்பாஹு ஸமன்விதா

 முந்தைய நாமாவின் படி தேவர்களின் கார்யங்களை நடத்தி வைக்க வேண்டும். அதற்கு அம்பாளுக்கு கைகள் வேண்டுமே?  தேவர்களுக்கு மட்டுமல்ல, இந்த அகில உலகத்தையும் அம்பாள்தான் காப்பாத்தரா. அதனால் வாக்தேவிகள் சொல்றா, அதற்காக அம்பாளுக்கு நமக்கு உள்ளது போல் இரண்டு கைகள் போதாதாம் !   சதுர் ன்னா நாலு. பாஹுன்னா கைகள். ஸமன்விதான்னா கூடியவள். அதாவது அந்த அம்பாள் நான்கு கைகளோடு இருக்கா என்று சொல்லும் வாக்தேவிகள், அசுரர்களை அதாவது கெட்ட எண்ணங்களை வதைக்கவும், தேவர்களை அதாவது நல்ல எண்ணங்களை தோன்றச் செய்யவும் கைகள் மட்டும் போதாது, அதுல ஆயுதங்களும் வேண்டும், அதப் பத்தி அடுத்ததா வர நாமாக்கள்ள சொல்லப்போரா.

6. உத்யத்பானு ஸஹஸ்ராபா

சூரியன் உதிக்கும்போது செம்மையான நிறத்தோடு இருக்கும்கறது நமக்கு தெரியும். அதுவே ஆயிரம் சூரியன்கள் ஒரே நேரத்தில் உதித்தால் எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாருங்கோ.  முன்பே பார்த்தோம் அக்னி சிவப்பானது என்று. சூரியனும் உதிக்கும்போது சிவப்பானது.  இங்கே சிதக்னியில் அம்பாள் உதித்தாள் என்று கூறும்போது அவள் எப்படி இருக்கிறாள் என்று பார்த்தால் அம்பாள ஆயிரம் சூரியர்கள் உதித்தது போன்.ற பிரகாசமுடையவள்ங்க்ரா. இப்படி நாமும் அவளை தியானம் செய்தால் நமது மனமும் இப்படி செம்மையாக சூரியன் போல் தக தக என்று ஜொலிக்கும். அப்படிபட்ட மனதில் அம்பாளின் சொரூபம் நன்கு விளங்கும்.

5. தேவகார்ய ஸமுத்யதா

தேவர்கள் என்ற ஒரு சாரார் நாம் செய்யும் யாகங்கள்ள தரும் அவிசுக்கு மகிழ்ந்து நமக்கும் இந்த ஒலகத்துக்கும் நன்ம பண்றவா. நல்ல எண்ணங்கள கொண்டவா. இதற்கு நேர்மாறா அசுரர்கள் கெட்ட எண்ணங்களை கொண்டவா. சதா இவா ரெண்டு பேருக்கும் சண்ட  நடந்துண்டே இருக்கும். இந்த சண்ட நம்ம மனசுலேயும் நல்ல எண்ணங்களுக்கும் கெட்ட எண்ணங்களுக்கும் சதா நடந்துண்டிருக்கு.  அம்பாள்கிட்ட கெட்ட எண்ணங்கள் நெருங்காது. அதனால அவள் எப்போதும் தேவர்கள் அதாவது நல்ல எண்ணங்களுக்கே உபகாரம் செய்யரான்னு சொல்ல வந்த வாக்தேவிக்கள் அவள தேவர்களின் காரியத்துக்கு அனுகூலம் செய்யரா என்று சொல்றா.  அதனால நாமும் சதா நல்ல எண்ணங்கள வைச்சுண்டா அம்பாள் நம்ம பக்கம் இருப்பா!

4. சிதக்னிகுண்ட ஸம்பூதா

அம்மாவும், பேரரசியும், சிங்கத்தின் மீது அமர்ந்த அந்த அம்பாள் எங்கருந்து தோன்றினா என்று சொல்றா வாக்தேவிகள்.  அக்னி குண்டம் என்றால் நெருப்பு தகிக்கும் ஒரு குண்டம். நெருப்பு என்றால் சூடானது. இந்த பிரபஞ்சமே சூட்டில்தான் இயங்கரது. நமது உடலும் சூட்டில்தான் இயங்கரது. ஆனா அந்த சூட்டுக்கு ஒரு அளவு இருக்கு. அதனாலதான் சூடு அதிகமாகி ஜொரம் வந்தா நம்மால தாங்க முடியல. இந்த அளவான சூட்டில் ஒரு குளிர்ந்த இயக்கம் இருக்கு. அதுக்கு பேரு சித்து. சித்துன்னா எல்லாத்தையும் அசைய செய்யறது. நமது உடலின் மத்திலயும், பிரபஞ்சத்தின் மத்திலயும் இந்த அக்னி சின்மயமா பிரகாசிக்கரது. இதிலேர்ந்துதான் அம்பாள் எழுந்து வரா. அதப் பார்த்த வாக்தேவிகள் அம்பாள பார்த்து "சிதக்னி குண்டத்திலிர்ந்து வந்தவளே! உனக்கு வந்தனம்னு சொல்ரா.

3. ஶ்ரீமத் சிம்மாசனேசுவரி

சிம்மம்னா சிங்கம். அதிலே அமர்ந்திருப்பவள்ன்னு அர்த்தம். சிங்கத்திற்கு நான்கு கால்கள். அது இங்கே சாதன சதுஷ்டயத்த குறிக்கர்து. சாதனம்னா வழி. சதுஷ்டயம்ன்னா நான்கு. நான்கு வழிகளை கடைபிடித்தால் அதன்மேல் அம்பாள் காட்சி கொடுப்பாள். அது என்ன நான்கு வழிகள்? 1. விவேகம் 2. வைராக்யம் 3. ஷமாதி ஷட்க சம்பத்தி  (இது ஆறு பண்புகளின் தொகுப்பு ஆகும்) அவை, சமம் – மனக்கட்டுப்பாடு தமம் – இந்த்ரியக் கட்டுப்பாடு உபரமம் – விலகியிருத்தல், கடமையைச் செய்தல் திதிக்ஷா – பொறுமை, சகித்துக் கொள்ளுதல் ஸ்ரத்தா – நம்பிக்கை ஸமாதானம் – மன ஒருமுகப்பாடு 4. முமுக்ஷுத்வம் (ஞானம் அடையவேண்டும் என்ற வெறி). இந்த நான்கு சாதனைகளும் சம்பத்தி (செல்வம்) எனப்படும். இந்த நான்கு சாதனைகளின் இருப்பிடம் நமது மனம். இதன் மேல் வீற்றிருக்கிறாள் என்று இந்த நாமாவில் வாக்தேவிகள் சொல்றா. 

2.ஶ்ரீ மஹாராக்ஞி

அடுத்ததா வாக்தேவிகள் அம்பாள பேரரசின்னு புகழரா. அறிவியல் சொல்றது நாம பாக்கற இந்த உலகம் மட்டும் இல்ல அத தவிர பலகோடி உலகங்கள் சேர்ந்த பல அண்டங்கள் இருக்கு. அப்படி பார்க்கும்போது இந்த சூரிய மண்டலம் போல பல சூரிய மண்டலங்கள் இருக்கு. அத ஒரு பராசக்தி கட்டி வச்சு ஆளனுமில்லையா? அப்படி அதாவது இந்த பேரண்டங்களுக்கெல்லாம் அரசியாக இருந்து ஆளுபவள் அந்த பராசக்தியான பேரரசிதான் அம்பாள். அதனலதான் அவள வாக்தேவிகள் மஹான்னா பெரிய, ராக்ஞின்னா அரசி, அதாவது பேரரசின்னு சொல்றா. 

1.ஶ்ரீமாதா

நம்ம பெத்த அம்மா நமக்குத் தெரியும். அப்படி இந்த ஒலகம் முழுக்க ஒரு கொழந்தன்னா அத பெத்தவ ஒருத்தி இருக்கணுமில்லையா. அவளத்தான் ஶ்ரீ மாதா. அதாவது அம்மாவுக்கெல்லாம் அம்மா என்று சொல்லரா வாக்தேவிகள். ஶ்ரீ அப்படின்னா அமிர்தம்னு ஒரு பொருள். பரசிவன் விஷத்த சாப்பிட்டும் உயிரோட இருக்கார்னா அதுக்கு அம்பாள்கற அமிர்தம் அவர அப்படி காப்பாத்தி இருக்கு. உயிர கொடுக்கரவதானே அம்மா. அப்படி பெரியவரான பரசிவனோட உயிர காப்பாத்தினவ அந்த அம்பாள். அதனால அவள் பெரிய அம்மா, அதாவது பெரியநாயகித் தாயார். இப்படியும் ஒரு அர்த்தம் சொல்றா பெரியவாளான ஶ்ரீபாஸ்கராசார்யாள்.