3. ஶ்ரீமத் சிம்மாசனேசுவரி

சிம்மம்னா சிங்கம். அதிலே அமர்ந்திருப்பவள்ன்னு அர்த்தம். சிங்கத்திற்கு நான்கு கால்கள். அது இங்கே சாதன சதுஷ்டயத்த குறிக்கர்து. சாதனம்னா வழி. சதுஷ்டயம்ன்னா நான்கு. நான்கு வழிகளை கடைபிடித்தால் அதன்மேல் அம்பாள் காட்சி கொடுப்பாள். அது என்ன நான்கு வழிகள்?

1. விவேகம்

2. வைராக்யம்

3. ஷமாதி ஷட்க சம்பத்தி 

(இது ஆறு பண்புகளின் தொகுப்பு ஆகும்)

அவை, சமம் – மனக்கட்டுப்பாடு

தமம் – இந்த்ரியக் கட்டுப்பாடு

உபரமம் – விலகியிருத்தல், கடமையைச் செய்தல்

திதிக்ஷா – பொறுமை, சகித்துக் கொள்ளுதல்

ஸ்ரத்தா – நம்பிக்கை

ஸமாதானம் – மன ஒருமுகப்பாடு

4. முமுக்ஷுத்வம் (ஞானம் அடையவேண்டும் என்ற வெறி).

இந்த நான்கு சாதனைகளும் சம்பத்தி (செல்வம்) எனப்படும்.

இந்த நான்கு சாதனைகளின் இருப்பிடம் நமது மனம். இதன் மேல் வீற்றிருக்கிறாள் என்று இந்த நாமாவில் வாக்தேவிகள் சொல்றா. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா