இடுகைகள்

46. ஸிஞ்சான மணி மஞ்ஜீர மண்டித ஶ்ரீ பதாம்புஜா

ரத்னப் பரல்கள கொண்ட சிலம்புகள அணிஞ்ச பாத கமலங்கள கொண்டவளாக இருக்கிறா அம்பாள்.  சிலம்புகள ஞானனுபூதியாக உருவகப் படுத்தினா அதுல தோன்றும் ரத்னப் பரல்கள ஞான பூமிகைகளா பார்க்கலாம்.  இந்த ஞான பூமிகைகள ஏழு விதமா பல்வேறு நூல்ல சொல்லப்படறது. அதுல  1. சுபேச்சா (நல்ல ஆசை)  2 விசாரணை (சுய விசாரணை) 3 தனுமானசி (நுட்பமான மனம்) 4: சத்வபட்டி (ஒளியை அடைதல்) 5 அசம்சக்தி (உள் பற்றின்மை) 6: பதார்த்த பாவனா (ஆன்மீக தரிசனம்) 7: துரியா (உச்ச சுதந்திரம்) இப்படி சில பேர் சொல்றா. எப்படி இருந்தாலும் ஞானத்த அடைய சில படிகள் இருக்குன்னு புரிஞ்சுக்கணும். அதான நம்ம நோக்கம் ?

45. பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா

தாமரை மலர் சேற்றில் இருந்து வருவது. அம்பாளோட இரண்டு பாதங்களும் எங்க இருக்கு ? நம்மோட சிரசில. அதாவது பிரம்மரன்த்ரங்கர சரோருஹரம். நமது பிராரப்தங்கள் சேரா நம்மோட மனசுல இருக்கு. ஆனாலும் அவளோட பாத கமலங்கள் அதிலேர்ந்து வாசனை உள்ள மலர்களா விளங்கர்துன்னு சொல்ல வந்த வாக்தேவிகள், அம்பாளோட இரண்டு பாதங்களும் தாமர மலரப் போல பிரகாசிக்கிறதுங்கறா.  அந்த தாமர மலர்களைப் போன்ற அவளோட இரண்டு சரணங்கல நாம மனசுல தியானம் பண்ணி நெனைச்சோம்னா நமது சேறான பிராரப்தங்கள் இருந்த இடம் தெரியாம போய் நம்ம மனசு சுத்தமாகி அதுல பிரம்ம ஞானம் பிரகாசிக்கும். 

44. நக தீதிதி சஞ்சன்ன நமஞ்சன்ன தமோகுணா

தமம்னா இருட்டு. நம்மகிட்ட இருக்கும் அறியாமைதான் தமோ குண இருட்டு. நான் ஆன்மாங்கர எண்ணத்த தெரியாம இந்த இருட்டு மறைக்கரது. வெளிச்சம் வந்தா இருட்டு தானா மறஞ்சிடும். பெரிய இருட்ட போக்கரத்துக்கு பெரிய வெளிச்சம்தான் வெனுங்கறது இல்ல. ஒரே ஒரு சிறிய பொறி போறும்.  அம்பாள் உடல்ல இருக்கற சிறிய பகுதி அவளோட நகங்கள் தான். அதுல இருந்து காந்தில அதாவது பிரகாசத்துல நம்மோட அறியாமைங்கர இருட்டு போய்விடும்கரா வாக் தேவிகள் இந்த நாமாவுல. 

43. கூர்ம பிருஷ்ட ஜைஷ்ணு பிரபதான் விதா

கூர்மம்னா ஆமை.  அம்பாளோட புறங்கால்கள் ஆமையோட முதுகு போல வளஞ்சு இருக்காம்.  கூர்மாசனம்னு ஒண்ணு உண்டு. அம்பாள் இருப்பிடமான சில வகை மேருவிலும் கீழே கூர்ம ஆசனம் போல் அமஞ்சு இருக்கறத பார்க்கலாம். அதனால கூர்ம ஆசனத்தில் அம்பாள் இருக்கறதா சொல்ல வந்த வாக்தேவிகள் அம்பாளோட புறங்கால்கள் ஆமையோட முதுகு போல வளஞ்சு இருக்குன்னு சொல்றா. 

42. கூடகுல்பா

கூடம்னா ரகசியம், யாருக்கும் தெரியாதுன்னு அர்த்தம். குல்பம்ன்னா கணுக்கால். அம்பாளோட கணுக்கால்கள் அவளோட புடவையில மரஞ்சு இருக்கு. கூடம்நா உருண்ட, வட்டமானன்னு ஒரு அர்த்தம். அப்படிப்பட்ட கணுக்கால்கள்ன்னும் சொல்லலாம். தத்வார்த்தமா பார்த்தோம்னா அவளோட வித்யை கூடமானது . அதாவது ரஹஸ்யமானது. இப்படிப்பட்ட வித்யை யைக் கொண்டவள்னு சொல்லலாம். நீண்ட கணுக்கால்கள் போல அவளோட வித்யையும் மிக நீண்டது. ஊகித்து அறியலாமே தவிர யாராலும் முழுவதும் பார்க்க இயலாதுன்னு சொல்றா வாக்தேவிகள்.

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

இந்திரகோபம்னா ஒரு வகை சிவப்பு பூச்சி, மின்மினிப் பூச்சின்னு சொல்லலாம். பரிக்ஷிப்தன்னா சிதறி இருக்குன்னு அர்த்தம். ஸ்மரன்னா மன்மதன சொல்லுவா. தூணன்னா அம்பறாத்தூணி, அதாவது அம்புக் கூடு. ஜங்கம்னா முன்னங்கால்கள்.  இப்ப முழு அர்த்தம் பார்க்கலாம்.  அம்பாளின் முன்னங்கால்கள் மன்மதனோட கையில உள்ள அம்புக்கூடு போலவும், அதிலிருந்து நீண்ட நகங்கள்ள உள்ள சிவப்பு நிறம் அம்புகளாக மின்னும் மின்மினிப் பூச்சி போலவும் இருக்காம்.  இந்த நாமாவில வாக்தேவிகள் அம்பாளின் வடிவத்த கவி நயத்தோட வர்ணிக்கரா. 

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா

மாணிக்யன்னா மாணிக்கம், முகுடன்னா மகுடம், ஜானுத்வயம்ன்னா இரண்டு முழங்கால்கள். விராஜிதான்னா எழிலுடன் விளங்குகிறாள்ன்னு சொல்றா வாக்தேவிகள். அதாவது மாணிக்க கிரீடம் போல அம்பாளோட முழங்கால்கள் இருக்குன்னு சொல்றா.  அம்பாள் மெல்லிய அங்கங்கள் உடையவளா இருக்கா. ஆனா முழங்கால்கள் மட்டும் சற்று கடினமா இருக்கும். நவ ரத்னங்கள்ள மாணிக்கமும் சற்று கடினமானது. அதனால முழங்கால்கள் இறுக்கமான மாணிக்க மகுடம் போல இருக்குங்கர உவம மகுடம் தரித்தால் போல அழகா இருக்கு.