14. குருவிந்த மணி ஶ்ரேனி கணத் கோடீர மண்டிதா

மகுடம்னா ராஜாக்கள் அணியும் கிரீடம். இதில் அவர்கள் தலமுடி தெரியாத வகைக்கு இருக்கும்.  கோடீரம்னா மகாராணிக்கள் அணியும் கிரீடம். இதுல அவர்கள் கூந்தல் முடிகள் அழகா தெரியும்படி அமைஞ்சிருக்கும்.

குருவிந்த மணிந்கரது பத்மராகம் என்கர ஒரு கல். இது சிவப்பான நிறத்துல இருக்கும். அம்பாளோட தலையில உள்ள கிரீடத்துல இந்த கற்கள் வரிசையா இருக்கு.

கிரீடம்கரது உயர்வான ஞான நிலைய குறிக்கறது.  சிவப்பான கற்கள் ஞான நிலையின் அனுபவங்கள்னு சொல்லலாம்.  இதத்தான் அம்பாள் தன்னோட சிரசுல வைச்சுண்டு இருக்கா. இப்படி தியானம் செஞ்சா நமக்கு அம்பாளோட அனுகிரஹம்கர ஞான அனுபவம் கெடைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா