11. பஞ்ச தன்மாத்ர ஸாயகா

 

பஞ்சன்னா அஞ்சு. தன்மாத்திரம்னா புலன்கள். ஸாயகான்னா அம்புகளாக கொண்டவள். 

மனம் வில்லுன்னா அதன் வழியே செல்லும் அம்புகள் நம்மோட ஐந்து புலன்களாகத்தான் இருக்க வேண்டும் இல்லையா? வில்லு மெல்லிய கரும்பாக இருந்தால் அதனால் எய்யப்படும் அம்புகள் மென்மையான ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். அதனால் அவை மலர் அம்புகள்ங்கரா வாக்தேவிகள். 

என்னதான் வலிமையான வில்லா இருந்தாலும் அதனால இலக்கை அடைய முடியாது. அதற்கு அம்புகள் வேண்டும். அதன் வழியேதான் அதன் செல்லுகை. மனம் எத்தகைய வலிமை என்பது அது ஐம்புலன்களின் செயல்பாட்டில்தான் உள்ளது.

வெகு தூரத்தில் இருந்து வரும் சப்தத்தை, காதுகளால் என்ன சப்தம் என்பதை அறிய முடியாது. மனம் காதுகள் வழியாகச் சென்று அது என்ன சப்தம் என்பதை அறிந்து கொள்கிறது. காதிற்கு அந்த சப்தம் நல்லதா கெட்டதா என்பது தெரியாது. மனம்தான் அவரவர்களின் பக்குவத்தைப் பொறுத்து அதனை விளங்கிக் கொள்கிறது.

இப்படியே ஒவ்வொரு புலன்களுக்கும் பொருத்திப் பார்க்கணும். 

நாம கேட்கற சப்தம் தொலை தூரத்திலிருந்து வரது. அது நமது காதின் வழியே மனசுல போன உடனே அவ்வளவு பெரிய தூரத்தை கடந்து வந்து 

அந்த மனத்தினால் சில வினாடிகளில் அந்த தூரத்தை பரவி நின்று அதனை உணர முடிகிறது என்றால் இது ஒரு பூரணத்வம் (முழுமை) தான். அப்படி அது கடந்து வந்த நேரத்தை (வினாடிகளை) கூர்ந்து கவனித்தால் அந்த வியாபகமான ஒரு நிலை திடப்படும். இப்படி ஐம்புலன்களையும் கூர்ந்து கவனித்தால் அதன் இடையீடான தொடர்பு ஒரு இன்ப அனுபவமாகபரிணமிக்கும்.. அந்த அனுபவம் அனுபூதியாக இருக்கறது. அதன் பெயரே லலிதா அதாவது லலிதா அனுபூதி. வாக்தேவிகளின் இந்த நாமாக்களை பொருளுணர்ந்து அனுபவித்து சொன்னா இந்த அனுபூதி நமக்கு திடப்படும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா