10. மனோரூபேக்ஷு கோதண்டா

 மனசுங்கறது நாம கண்ணால பார்க்க முடியாத ஆனா நமது ஐம்புலங்களால் தனது இருப்பை உணர்த்தும் ஓர் அந்தக்கரணம் (உள் உறுப்பு). அந்த மனச உடையவன் மனிதன்.  அம்பாள் கையில ஒரு வில் இருக்கறது. அது கரும்பினால் ஆன வில். மன்மதன் என்று ஒருவன் நமது காமத்திற்கு அதிபதியாக இருக்கிறான். அவனும் தான் கையில் கரும்பு வில் வைத்திருக்கிறான்.

 காமம் நமது மனதில்தான் உதிக்கிறது. அது மூலமாத்தான் உலக வியாபாரங்கள் நடக்கறது. கரும்பில் கடினமான கணுக்கள் இருப்பது நமக்குத் தெரியும். ஆனால் அதன் ரசம் தித்திக்கும். அது போல நமது மனம் கடினமாக இருந்தாலும் உள்ளே இந்திரிய வியாபாரங்களினால் வாழ்வில் சுவை ஏற்படுகிறது. இந்த மனத்த நாம கட்டுப்படுத்துவது ரொம்ப கஷ்டம். அதனால இத நாம அம்பாள் கய்யில கொடுத்துடனும். அப்ப அது சுலபமா கட்டுக்குள் வந்து மன்மதங்க்ற காமத்துக்கிட்டேர்ந்து விலகி அலை பாயும் நமது மனசு நம்ம இஷ்டத்துக்கு நடக்காம அம்பாள் இஷ்டப்படி நடக்கும்.

கடைசில மனசுன்னு ஒண்ணு இல்லாமலே போயி நம்மள மோக்ஷ சாம்ராஜ்யதுக்கும் அழைச்சுண்டு போகும். இதையே அம்பாள் தன் கையில வில்லாக வச்சுண்டு இருக்கான்னு வாக்தேவிகள் சொல்றா.  வில்லுன்னு ஒண்ணு இருந்தா அம்புன்னு ஒண்ணு இருக்கணுமே, அத அடுத்த நாமாவில சொல்லப்போரா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா