8. ராகஸ்வரூப பாசாட்யா

 ராகம் என்ற வடிவுடைய பாசத்தை கையில் கொண்டவள்.


இராகன்னா ஆசை. பாசம்னா கயிறு. நமக்கு உள்ளது வெறும் ஆசை. அதுவே அம்பாளுக்கு ஆசைனா அது இச்சா சக்தி. இடது பின் கையில் அம்பாள் இச்சா சக்தி என்ற பாசக்கையிரை வைச்சுண்டு இருக்கான்னு வாக்தேவிகள் சொல்றா. 

நமது விருப்பப்படி ஆசையை நாம் வளைக்க முடியாது. ஆனால் அம்பாள் விரும்பினா அது கயிறு மாதிரி தனது ஆசையை வளைத்து இயங்க வைக்க முடியும். 

நமது ஆசைகளையும் அம்பாள் கையில் கொடுத்து விட்டால் போதும், அது நிறைவேறக் கூடியதா இருந்தா அம்பாள் நிறைவேற்றி வைப்பா. அப்படி நிறைவேறலைன்னா அதுவும் அம்பாள் இஷ்டம்னு இருக்கணும். அப்படி இருந்தா நாமும் எந்த கவலையும் இல்லாம  நிம்மதியா இருக்கலாம். நிம்மதியா எந்த கவலையும் இல்லாம ஸ்வரூப தியானத்தில் இருப்பதுதான் மோக்ஷம், ஞானம் என்பதெல்லாம். இதை அருள்பவள்தான் ராகஸ்வரூப பாசாட்யாவான அம்பாள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா