24. நவ வித்ரும பிம்பஶ்ரீ நியக்காரி ரதனஸ்சதா

பவழமும் கோவைப் பழமும் இயற்கையா சிவப்பா இருக்கும். அவை வெளிலேர்ந்து உண்டாக்கின சிவப்பு இல்ல. அதுபோல அம்பாளின் உதட்டுக்கு எதுவும் சிவப்பு நிறப் பூச்சு போடற மாதிரி இல்லாம இயற்கையாவே சிவப்பு நிறமா இருக்கு. அதப்பார்த்த பவழமும் கோவைப் பழமும் தாங்கள்தான் இயற்கையா சிவப்புங்கற கர்வத்த விட்டு தல குனிஞ்சு நிக்கறதாம். இதத்தான் வாக்தேவிகள் அழகா வர்ணிக்கறா. 

உள் அர்த்தமா சொல்லனும்னா கோவைப் பழமும் பவள சிவப்பு நெறங்கள் சாமானிய ஞானத்த குறிக்கரது. லலிதானுபவம் மிகுந்த ஆத்ம ஞானியின் இயற்கை ஞானமாகிற விசேஷ சிவப்பப் பார்த்து சாமானிய ஞானங்கள் தலை குனியறதோன்னு நினைக்க தோன்றது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா