34. நாப்யால வால ரோமாலி லதா பல குசத்வயி

நாபின்னா வயிறு, தொப்புள். ரோமம்ன்னா ரோமங்கள். லதான்னா கொடி. குசத்வயின்னா இரு ஸ்தனங்கள்.

தொப்புள்ங்கர வேரில் இருந்து மேலே வந்த ரோமங்களான கொடில பூத்த கனிகள போல இருக்காம் அம்பாளோட ஸ்தனங்கள்.

காம நோக்கில் இதன் வர்ணனையைப் பாக்காம கவியின் நோக்கில் பார்க்கும்போது இதுல அம்பாளோட அழகு புலப்படறது. 

ஆழமான அர்த்தத்தை பார்த்தோம்னா ஆன்ம சாக்ஷாத்காரம்கற வேரிலிருந்து வந்த நிதித்யாசன கொடிகள்ள விளன்ச ஸவிகல்பம், நிர்விகல்பம் என்கிற இரண்டு சமாதிக் கனிகள்தான் லலிதானுபவத்தின் இரண்டு ஸ்தனங்கள் என்கிற சூக்ஷ்மமான விஷயம் புரியும். புரிந்து சிறக்க புவனத்தாயை புந்தியில் வைத்துப் போற்றுவோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா