26. கற்பூர வீடிகா மோத ஸமாகர்ஷதிகந்தரா

கற்பூர வீடிகைங்கர தாம்பூலத்தால சிவந்த திருவாய் கொண்டவளாம் அம்பாள்.

கற்பூரம்னா பச்சைக் கற்பூரங்கர ஒரு வகை வாசனைத் திரவியம்.

கற்பூர வீடிகைன்னா வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, பச்சை கற்பூரம் எல்லாம் சேர்ந்த தாம்பூல வகை. 

இதை தரிப்பதனால வாய் சிவந்து விடும்.

அன்னையின் தாம்பூல மகிமையால வாக்வன்மை பெற்றவா ஏராளம். 

திருஞான சம்பந்தர், காளிதாசன், மூக சங்கரர் போன்றவாள ப்ரத்யக்ஷ உதாரணமா சொல்லலாம்.

ஶ்ரீ வித்யா உபாசகாளா இருக்கரவா இந்த கற்பூர வீடிகைய தினமும் பூஜைல அம்பாளுக்கு உபசாரமா பண்ணுவா. அதனாலே அவாளுக்கு வாக் பலிதம் உண்டாரத கண்கூடா நாம பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா