27. நிஜ ஸல்லாப-மாதுர்ய- விநிர்பர்சித-கச்சபி

சங்கீத வாத்யங்கள்ள சிறந்தது வீணைன்னு சொல்லுவா. அப்படி சங்கீத வித்வான்கள், தேவதைகள் இவா உபயோகிக்கிற வீணைகளுக்கு சில தனிப்பட்ட பேரும் இருக்கு. அத போல கல்விக்கு தேவதையான சரஸ்வதி உபயோகிக்கிற வீணைக்கு கச்சபின்னு பேரு. நாரதர் உபயோகிக்கிற வீணைக்கு மஹதின்னு பேரு. இது அவருக்கு ஹனுமார் கொடுத்தது. யார் யாருக்கு எந்த வீணைந்கர பட்டியல கூடுமானவர கொடுத்துருக்கேன். சிலது விட்டுப் போயிருக்கலாம். மாறிப் போயிருக்கலாம். தெரிஞ்சவா சொன்னா சரியா மாத்தி பதிவு பண்ரேன்.

1. பிரம்மதேவனின் வீணை - அண்டம். 

2. விஷ்ணு - பிண்டகம்.

3. ருத்திரர் - சராசுரம்.

4.கௌரி - ருத்ரிகை. 

5. காளி - காந்தாரி

6. லட்சுமி - சாரங்கி.

7. இந்திரன் - சித்திரம் 

7. சரஸ்வதி - கச்சபி எனும் களாவதி. (இந்த நாமாவுல நாம பார்த்தது)

9. வியாழன்- வல்லகியாழ் 

10. குபேரன் - அதிசித்திரம் 

11. வருணன் - கின்னரி.

12. திலோத்தமை - நாராயணி.

13. வாயு - திக்குச்சிகையாழ்.

14. அக்கினி - கோழாவளி.

15. நமன் - அஸ்த கூர்மம்.

16. நிருருதி - வராளி யாழ்.

17. ஆதிசேடன் - விபஞ்சகம். 

18. சந்திரன் - சரவீணை

19. சூரியன் - நாவீதம்.

20. சுக்கிரன் - வாதினி

21. நாரதர் - மகதி யாழ் (பிருகதி)

22. தும்புரு - களாவதி (மகதி).

23. விசுவாவசு - பிரகரதி.

24. புதன் - வித்யாவதி.

25. ரம்பை - ஏக வீணை.

26. மேனகை - வணி.

27. ஊர்வசி - லகுவாக்ஷி

28. ஜயந்தன் - சதுகம்.

29. ஆஹா,ஊஹூதேவர்கள் - நிர்மதி

30. சித்திரசேனன் - தர்மவதி (கச்சளா).

31. அனுமன் – அனுமதம்

32. ராவணன் – ராவணாசுரம்

இப்ப இந்த நாமாவோட விஷயத்துக்கு வருவோம். 

சரஸ்வதி அம்பாள் முன்னாடி தன்னொட கச்சபிந்கர வீணைய வாசிக்க ஆரம்பிக்கிறா. அற்புதமான ராகத்துல அரம்பிச்சோன்ன அம்பாள் தன்னோட மதுரமான வாக்கால "ஸாது ஸாது" ந்கரா. அதாவது மிகவும் நன்றுன்னு அர்த்தம். 

சாதாரணமா பாடும்போது வாத்தியம் வாசிக்கும்போது நன்னா இருக்குன்னு சொன்னா அவாளுக்கு குஷி அதிகமாகி சந்தோஷமா தொடருவா. ஆனா இங்க வித்தியாசமா சரஸ்வதி தேவி, அம்பாள் நன்னா இருக்குன்னு சொன்னவுடன் தன்னொட வீணைய உறையில போட்டு மூடி வச்சுட்டாளாம். ஏன்னா அம்பாளோட குரல் மாதுர்யம் கச்சபியோட நாதத்தோட பல மடங்கு அதிகமாக இருக்காம். 

நமது ஶ்ரீஆசார்யாள் இதத்தான் 

விபஞ்ச்யா காயந்தீ விவிதம் அபதானம் பசுபதே:

த்வயா-(ஆ)ரப்தே வக்தும் சலித-சிரஸா ஸாது-வசநே |

ததீயைர்-மாதுர்யைர் அபலபித தந்த்ரீ-கல-ரவாம்

நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேந நிப்ருதம் || 1

என்ற சௌந்தர்ய லஹரி துதில விளக்கமா சொல்றா.

("விபஞ்சி’ என்றால் வீணை. பரிவாதினி என்றும் வீணைக்குப் பெயர் உண்டு).

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா