16. முகசந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷகா

 அம்பாளோட நெத்தி அரைவட்ட சந்த்திரனப் போல இருக்குன்னு முந்திய நாமாவுல பார்த்தோம். ம்ருகம்னா கஸ்தூரி மான். அந்த மான்லேர்ந்து வர கஸ்தூரிய அழகே உருவான அம்பிகை நெத்தில அணிந்திருக்கா. 

இது எப்படி இருக்குன்னா சந்திரன்ல உள்ள களங்கம் போல இருக்குன்னு சொல்றா வாக்தேவிகள்.

சந்திரன் அம்பாள் உபாசகன். இருந்தாலும் அவனோட வாழ்க்கையில ஒரு களங்கம் இருக்குன்னு புராணங்கள் சொல்றது. இந்த உலகத்திலேர்ந்து பார்த்தாலும் நிலாவுல ஒரு களங்கம் போன்ற கறையைப் பார்க்கலாம். அப்படி இருந்தும் அம்பாள் அவனுக்கு தன் கருணையினால அருள தந்திருக்கா. 

சந்திரன் நம்ம மனசோட அதிபதின்கரது சாத்திரம். நமது மனத்திலும் காமக் குரோதங்கள் என்கிற களங்கம் இருக்கு.

இருந்தாலும் அவள வணங்கர நமக்கும் நிச்சயம் அருள் தருவாங்கரதில எந்த சந்தேகமும் இல்ல.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா