19. நவ சம்பக புஷ்பாப நாஸா தண்ட விராஜிதா

சம்பக மலர்ன்னு ஒரு புஷ்பம் இருக்கு. அதன் வாசனை சொல்லி மாளாது. ஆனா சீக்கிரமே வாடிடும். அதோட நிறமும் சந்தனம் மாதிரி இருக்கும். 

இந்த நாமாவுல வாக்தேவிகள் அம்பாளொட நாசி அதாவது மூக்கு அன்றலர்ந்த சம்பக மலர் போல இருக்குன்னு சொல்லரா. 

மூக்கு வாசனைக்கு உகந்த மிருதுவான புலன் இல்லையா, அதனால வாடாத வாசனை மிகுந்த சந்தனம் போன்ற நெறத்தில அம்பாள் நாசி இருக்குன்னு சொல்றது ரொம்ப பொருத்தமா இருக்கு.

உள்ளர்த்தமா பார்த்தா வாசன மிகுந்த இந்த சகல பிரபஞ்சமுமே அம்பாள் மூக்குன்னு சொல்லலாம். (இங்க வாசனைன்னா வினைகள்னு அர்த்தம் பண்ணிக்கணும்). இதத்தான் ரகசியமான சில கிரந்தங்கள் வாசன மிகுந்த இந்த பிரபஞ்சம் அம்பாள் வடிவம்ன்னு சொல்றது. அதனால வைராக்கியம் மிகுந்த ஞானிகளுக்கு இந்த பிரபஞ்சம் சூன்யமா தோணாது, அப்படிப்பட்ட மஹான்கள் இந்த பிரபஞ்சத்த அம்பாள் வடிவமா தன் நாசியால சுவாசிக்கிரான்னு சொல்லலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா