21. கதம்ப மஞ்ஜரி க்லுப்த கர்ணபூரண மனோஹரா

கதம்ப மலர்கள் மாதிரி குவிந்து விரிந்த காதுகள உடையவளாம் அம்பாள். 

தொலை தூரத்திலிருந்து வந்த சப்தத யானையின் பிளிறல் என்று நினைத்து சிரவண குமாரன் மீது அம்பெய்த தசரத ராஜாவின் கதையை இங்கு நினைச்சுப் பாருங்கோ.

நாம கேட்கற சப்தம் தொலை தூரத்திலிருந்து வரது. அது நமது காதின் வழியே மனசுல போன உடனே அவ்வளவு பெரிய தூரத்தை கடந்து வந்து 

அந்த மனத்தினால் சில வினாடிகளில் அந்த தூரத்தை பரவி நின்று அதனை உணர முடிகிறது என்றால் இது ஒரு பூரணத்வம் (முழுமை) தான். அப்படி அது கடந்து வந்த நேரத்தை (வினாடிகளை) கூர்ந்து கவனித்தால் அந்த வியாபகமான ஒரு நிலை திடப்படும். இப்படி ஐம்புலன்களையும் கூர்ந்து கவனிச்சா அதன் இடையீடான தொடர்பு ஒரு இன்ப அனுபவமா பரிணமிக்கும்.. அந்த அனுபவம் அனுபூதியாக இருக்கறது. அதன் பெயரே லலிதா அதாவது லலிதா அனுபூதி. வாக்தேவிகளின் இந்த நாமாக்களை பொருளுணர்ந்து அனுபவித்து சொன்னா இந்த அனுபூதி நமக்கு திடப்படும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா